நம்முடையத் தமிழ்த் தேசிய தளத்தில் நாம் தொடர்சியாகத் தமிழர்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்...
தமிழ்தேசிய அரசியல் என்பது தேர்தல் மற்றும் மக்களாட்சித் தத்துவத்தால் உருவாக்கப் படும் அளவிற்கு பலவீனமான அரசியல் அல்ல; மேடையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக வாய் வலிக்கக் கத்திவிட்டு,
"அதே பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடுத்து யார் மிக விரைவாக அவர்களது இயற்கை வளச் சுரண்டகளுக்கு வேலைச் செய்துக் கொடுப்பார்கள் எனத் தேர்ந்தெடுத்தப் பிறகு அதேப் பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படும் நாடகமான தேர்தல் அரசியலில் பங்கேற்பது என்பது எவ்வளவுப் பெரிய மூடத்தனம் என அறிந்துக் கொள்ள வேண்டும்.
நான் இப்படி எழுதியப் பிறகு ..,உடனே படிப்பதை நிறுத்திவிட்டு விரைவாக அடுத்த வேலையை பார்க்கச் செல்வார்கள் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த மக்கள் பலர்..
உண்மையைச் சொல்லப் போனால் இந்தப் பதிவை எழுதும் நானும் உங்களைப் போல நாம் தமிழர்க் கட்சியின் அனைத்துச் செயல்பாடுகளையும் பாராட்டிப் பெருமைப் பேசும் சராசரி தமிழரில் ஒருவன்தான்..
என்ன ஒன்று நான் உங்களைப் போல வாக்கு அளித்தால் எல்லாம் மாறிவிடும் என்றக் கருத்தில் மட்டும் வேறுபட்டவன், மற்றப்படி நானும் தமிழ்த்தேசிய அரசியலை விரும்பும் தமிழர் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.
"ஆகவே நான் என்னச் சொல்ல வருகிறேன் என்பதைக் கொஞ்சம் பொறுமையுடன் படிக்க வேண்டிக் கொள்கிறேன்."
Comments (0)
Sign up to join the discussion.
Register LoginNo comments yet - be the first.